"தொண்டையிலே தொடர்ந்து கிச் கிச்" அதனால் ஏற்படும் வறட்டு இருமல், திடீர் திடீரென ஏற்படுத்தி அல்லல் படுத்தும். அலோபதி மருத்துவ முறையில் மருந்தை உட்கொண்டால் பல்வேறுவிதமான பக்க விளைவுகள் உள்ளது என அலோபதி மருத்துவர்கள் அறிவுரை சொல்வார்கள். ஆகவே அலோபதி மருத்துவத்தை வரட்டு இருமலுக்கு தவிர்த்துவிடுவது சிறந்த முடிவு.
அப்படியானால் மாற்று வழி என்ன? தமிழ் மருத்துவ முறைகளில், மருந்து என்றால் உணவே மருந்து. உண்ணும் உணவை, மருத்துவ தன்மை கொண்டதாக உண்ணுதல் நமது உணவு பண்பாட்டில் கலந்துவிட்ட ஒன்று.
வறட்டு இருமலைப் போக்க, மருந்து ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
1. தூதுவளைக் கீரை - தூய்மைப்படுத்திய கீரை ஒரு கைப்பிடி - சுமார் முப்பது - நாற்பது கிராம்.
2. சித்தரத்தை - நடுத்தரமான துண்டு. 10 அல்லது 15 கிராம். இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
3. கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சை.
4. எலுமிச்சை - அரை பழம்.
ரசம் செய்வது எப்படி?
அகண்ட வாய் உள்ள, ஆழம் கூடிய பாத்திரத்தில், அரை லிட்டர் தண்ணீரை வெதுவெதுப்பாக சூடாக்கவேண்டும். தண்ணீர் வெதுவெதுப்பான நிலையை அடைந்தவுடன், அதில் தூதுவளைக் கீரை, சித்தரத்தை, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை போட்டு, தண்ணீர் கொதித்து ஆவியாக விட வேண்டும். தண்ணீரின் அளவு 150 மில்லி லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய நிலையில், நீரை நல்ல தூய்மையான பாத்திரத்தில் வடிகட்டி, அதில் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடவேண்டும்.
நாம் காய்ச்சிய நீரின் சூடு குடிக்கும் அளவிற்கு தணிந்த பின், அதை நன்கு கலக்கி குடிக்க வேண்டும்.
15 நாட்களுக்கு தொடர்ந்து இந்த மருந்தை உட்கொள்ளும் பொழுது, முட்டை, ஆவின் பால் தவிர்த்த பிற பால், பாமாயில் எண்ணெயில் செய்த உணவுகள், பச்சை வாழைப்பழம் தவிர்த்த பிறவகை வாழைப்பழங்கள், ஆகியவற்றை அடுத்த 30 நாட்களுக்கு முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இந்த மருந்தை உட்கொள்வதால், எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. இரவு உணவிற்குப்பின் இதை குடிப்பதால் நன்கு தூக்கம் வரும்.
வாழ்க வளமுடன்!











