பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டு சட்டம் - ஆர் எஸ் எஸ் பாஜகவின் மற்றுமொரு ஜூம்லா...

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டு சட்டம் - ஆர் எஸ் எஸ் பாஜகவின் மற்றுமொரு ஜூம்லா...

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்ட வரைவு முழுமனதாக ஏற்கப்பட்டு நிறைவேறியது.

ஆனால் இது ஆர் எஸ் எஸ் பாஜகவின் பெண்களை ஏமாற்றுவதற்கான ஏமாற்று வேலை. எப்படி?

மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் மக்கள் தொகையை அறிந்த பின்பே இதை நடைமுறை படுத்தப் போகிறார்கள்.  2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இப்போதைக்கு நடப்பதாக தெரியவில்லை.  அப்படியே நடத்தப்பட்டாலும் அது வரும் மே திங்களுக்குள் முடிவடைவதாக இல்லை.

அப்படி முடிவடைந்தாலும், தொகுதிகள் மறு வரையறை என்பது வாய்பற்றதாக இருக்கும்.  தொகுதி மறு வரையறை என்றாலே ஆர் எஸ் எஸ் பாஜக ஒன்றிய அரசுக்கு எதிராக தென்னிந்தியா முழுவதும் கலவரம் ஏற்படும் என்பது உறுதி.  ஆர் எஸ் எஸ் பாஜகவின் வாக்கு வங்கி தென்னிந்தியாவிலிருந்து முற்றிலுமாக விலகிவிடும்.  ஆகவே தொகுதி மறு வரைமுறையை ஆர்எஸ்எஸ் பாஜக இப்போதைக்கு மேற்கொள்ளாது.

கடந்த 150 ஆண்டுகளில், ஆர் எஸ் எஸ் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தான் முதன்முறையாக, முறையாக நடத்தப்பட்டு வந்த ஒன்றை நடத்தாமல் விட்டு வைத்திருக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின் தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்பதால், இந்த பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் என்பது ஆர் எஸ் எஸ் பாஜகவின் மற்றுமொரு ஜும்லா என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்துரைக்கும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: