G மெயில் வரும் பெரும்பாலான அஞ்சல்களை தேவையற்றது என குறிப்பிடுகிறதா?
திறன் பேசியிலோ அல்லது கணிணி மூலமாகவோ G மெயில் மின்னஞ்சல்களை பார்கிறோம் என்றால், பல நேரங்களில், நமக்கு மிகவும் தேவையான மின்னஞ்சல் வந்து சேறாது.
அனுப்ப வேண்டியவரை தொடர்பு கொண்டால், முதல் நாளே மின்னஞ்சல் அனுப்பிவிட்டதாக கூறுவார்.
பின்பு நாம் தேவையற்ற அல்லது கழிக்கப்பட்ட கோப்புகளை தேடினால், நமக்கு தேவையான மின்னஞ்சல் அங்கே இருக்கும்.
G மெயில் கடந்த ஒரு மாதமாக, நமக்கு வரவேண்டிய கிட்டத்தட்ட எல்லா மின்னஞ்சலையும் தேவையற்றது என குறித்து நமது மடல் பெட்டிக்கு அனுப்பாமல் விட்டுவிடுகிறது.
இதற்கு என்ன தீர்வு?
முதல் தீர்வு: மின்னஞ்சலை குப்பை இல்லை என கூகுளுக்கு சொல்வது
முதலில், குப்பை என்று கூகுளால் குறிக்கப்பட்ட மின்னஞ்சல்களை தேர்வு செய்து, அவற்றை குப்பை (ஸ்பாம்) அல்ல என்று குறிப்பிடுவது.
குப்பை (ஸ்பாம்) அல்ல படம்
இவ்வாறு செய்வதன் மூலம், தேவையான மின்னஞ்சல்கள் மடல் பெட்டிக்கு (INBOX) நகர்தப்படும்.
ஆனாலும், அடுத்தமுறை, கூகுள் அத்தகைய மின்னஞ்சல்களை மீண்டும் குப்பை என்று அதற்கான கோப்புறையில் வைக்கும். ஆக, ஒவ்வொறு முறையும், நாம், குப்பை (SPAM) என்று குறிக்கப்பட்ட காப்புறையில் தேடி, மீண்டும் மீண்டும் கூகுளுக்கு இத்தகைய மின்னஞ்சல்கள் குப்பை இல்லை என்று சொல்லித்தர வேண்டும்.
இதற்கு மாற்று இருக்கிறது.
இரண்டாவது தீர்வு: தேவையான மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு பட்டியலில் சேர்ப்பது
உங்களுக்கு தேவையான மின்னஞ்சல் முகவரிகளை தொடர்புகள் பட்டியலில் சேர்த்தால், அவற்றை குப்பை என்று கூகுள் குறிப்பிடாது.
1. பக்கத்தின் வலது புறம், கட்டம் கட்டமாக ஒரு படம் இருக்கும். அதை சொடிக்கினால், "தொடர்புகள்" என்ற இணைப்பு வரும். அதை சொடுக்கவும். [பழைய G மெயில் பக்க வடிவத்தை பயன்படுத்துவதாக இருப்பின் G மெயில் சின்னத்தில் சொடிக்கி தொடர்பு பட்டியலுக்கு செல்ல வேண்டும்]
படம் -1
"தொடர்புகள்" என்ற இணைப்பு
2. படிவத்தை பயன்படுத்தி, தொடர்புகளை சேருங்கள்
படம் -2
படிவத்தை பயன்படுத்தி, தொடர்புகளை சேருங்கள்
தொடர்பு பட்டியலில் உள்ள மின்னஞ்சல்களில் இருந்து வரும் மின்னஞ்சல்களை கூகுள் குப்பை என்று குறிப்பிடாது.
மூன்றாவது தீர்வு: வடிப்பான் மூலம் மடல் பெட்டிக்கு அஞ்சல்களை வழங்கச் செய்வது
வடிப்பான்களை பயன்படுத்தி, தேவையான மின்னஞ்சல்களை வடிகட்டி, மடல் பெட்டிக்கு அஞ்சல்களை நகர்த்துவது.
இந்த முறை மூலம், நாம் பண்புரிமைப் பெயரை பொதுவாக பயன்படுத்தி அந்த பண்புரிமைப் பெயரில் இருந்து வரும் எல்ல மின்னஞ்சலையும் வடிகட்டலாம், அல்லது ஒவ்வொறு மின்னஞ்சல் பெயராக உள்ளிட்டு வடிகட்டலாம்.
1. படத்தில் உள்ளது போல, தேவையான மின்னஞ்சலை தேர்வு செய்துவிட்டு, வலது புறம், இணைப்பு பட்டியலில் மேலும் என்பதற்கு ஏற்றார் போல குறியீடு இருக்கும். அதை சொடுக்கவும்.
படம் -3
மேலும் என்பதற்கு ஏற்றார் போல குறியீடு இருக்கும். அதை சொடுக்கவும்.
2. தோன்றிய மேல்மீட்பில் "இது போன்ற செய்திகளை வடிகட்டு" என்ற இணைப்பை சொடுக்கவும். பின்பு, நமக்கு தேவையான மின்னஞ்சலை உள்ளிட்டு (பொதுவாக தானே உள்ளிட்டு இருக்கும்) "வடிப்பானை உருவாக்கு" என்ற பொத்தானை சொடுக்கவும்.
படம் -4
வடிப்பானை உருவாக்கு என்ற பொத்தானை சொடுக்கவும்
3. தோன்றி படிவத்தில் "இதை எப்போதும் குப்பைக்கு அனுப்ப வேண்டாம்" என்பதை தேர்வு செய்து, "வடிப்பானை உருவாக்கு" என்ற பொத்தானை சொடுக்கவும்.
படம் -5
இதை எப்போதும் குப்பைக்கு அனுப்ப வேண்டாம்
படம் - 4-ல் குறிப்பிட்டுள்ளது போல, முழு மின்னஞ்சல் முகவரிக்கு பதில், அதே படிவத்தில், பண்புரிமைப் பெயரை மட்டும் உள்ளிட்டு வடிப்பானை உருவாக்கலாம்.
அவ்வாறு செய்வதன் மூலம், ஒரு நிறுவனத்தில் இருந்து பலர் தத்தம் மின்னஞ்சலில் இருந்து அஞ்சல் அனுப்புகிறார்கள் என்றால், அவை அனைத்தும் முறையாக மடல் பெட்டிக்கு வந்து சேரும்.











