Weekend Getaway from Hosur 🌄 Pilikundu Adventure | Water, Hills & Fun 🎉 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Weekend Getaway from Hosur 🌄 Pilikundu Adventure | Water, Hills & Fun 🎉

📅 வெளியீடு நாள்: 12-09-2025

📄 விளக்கம்

Looking for a perfect weekend escape near Hosur? 🚗 👉 Pilikundu is waiting for you!

Here’s what makes it special:

🌊 River Cauvery boat rides (Parisal)

🍴 Delicious fresh fish meals

🌿 Hairpin bends & breathtaking hill views

📚 Learn how Cauvery river water is measured between TN & Karnataka

🌧️ Just 5 km away from Hogenakkal Falls – triple travel joy in one trip!

This weekend, Pilikundu gives you adventure, learning & relaxation – all at once. Pack your bags and enjoy nature’s beauty 💚

ஓசூரில் இருந்து தண்ணீரை அளக்க போகிறீர்களா? அல்லது படகில் சவாரி செய்யப் போகிறீர்களா? அல்லது அருவியில் குளிக்கப் போகிறீர்களா?

மலை முகட்டை தொட்டு, Hair Pin Bend-களில் லாவகமாக பயணித்து, வாருங்கள் பிலிகுண்டுவில் இந்த சனி ஞாயிறு பொழுதை கழிக்கலாம்! சாலையில் பயணிக்கிறோமா? அல்லது மரங்களுக்கு ஊடாக பயணிக்கிறோமா? என்று நம்மை மெய்சிலிர்க்க வைத்து, திக்கு முக்காட வைக்கிறது ஓசூரில் இருந்து, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்-ராம்-பாளையம் வழியாக பிலிகுண்டு செல்லும் பயணம்.

பச்சை பசேர் என்ற மலை முகடுகளுக்கு இடையே, குழந்தை போல தவழ்ந்து வரும் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி, கமகமக்கும் மீன் உணவு, அமைதியான ஆற்றங்கரை ஓரம் என மன அழுத்தத்தை நீக்கும் சூழல் கொட்டிக் கிடக்கிறது.

தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீட்டில், தண்ணீரை எவ்வாறு அளவிடுகிறார்கள் என்பதை ஆர்வமாக அறிந்து கொள்ள, கற்றல் சார்ந்த பிலிகுண்டு தரும் மகிழ்ச்சி.

பிலிகுண்டு வழியாகச் செல்லும் ஆற்று வெள்ளம், ஒகேனக்கலில் அருவியாக கொட்டுகிறது. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தான் ஒகேனக்கல். ஒரே சுற்றுலா பயணம், மூன்று வெவ்வேறு அனுபவங்களை தரும். இந்த சனி ஞாயிறு மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads