Protest in Hosur: N.S. Madeswaran Leads Demonstration Against Attack on Chief Justice B.R. Gavai | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Protest in Hosur: N.S. Madeswaran Leads Demonstration Against Attack on Chief Justice B.R. Gavai

📅 வெளியீடு நாள்: 16-10-2025

📄 விளக்கம்

A protest led by N.S. Madeswaran was held in Hosur, condemning the shocking incident where a lawyer allegedly attempted to throw a shoe at Chief Justice of India B.R. Gavai during court proceedings.

The act, carried out in the name of Sanatana Dharma, sparked nationwide outrage and drew criticism from legal and social organizations.

Solicitor General Tushar Mehta also commented, saying,

“In India today, every action seems to trigger multiple reactions — a troubling trend.”

The Dravidar Kazhagam organized this demonstration at Periyar Square, Hosur, expressing strong disapproval of any attempt to insult the judiciary.

📍 Location: Hosur, Tamil Nadu
🗓️ Event: Protest Against Disrespect to Judiciary
🎤 Coverage: HosurOnline

#Hosur #Protest #Judiciary #IndiaNews #BRGavai #DravidarKazhagam #SanatanaDharma #TamilNaduNews #HosurOnline #BreakingNews #IndianLaw #Justice

ஓசூரில் N S மாதேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம். உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் B R Gavai மீது, வழக்கறிஞர் ஒருவர் தனது காலில் அணிந்து இருந்த Shoeவை, எறிய முற்பட்டார். அந்த வழக்கறிஞர், சனாதனத்தின் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என கூச்சலிட்டவாறு இத்தகைய செயலில் ஈடுபட்டது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக அளவில் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த வழக்கறிஞர் மத்திய பிரதேசம் மாநிலம் கஜுராஹோவில் உள்ள ஏழு அடி உயரம் கொண்ட விஷ்ணு சிலையின் துண்டிக்கப்பட்ட தலையை உடனே நிறுவ வேண்டும் என கோரி வழக்காடினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இது வரலாற்றுச் சின்னம் தொடர்புடையது. தொல்லியல் துறையின் அனுமதி தேவை. வழக்குகளால் இதற்கு தீர்வு எட்ட இயலாது. நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பின், விஷ்ணுவிடமே விரைவில் தீர்வு கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.

உடனடியாக அடிப்படைவாத அமைப்புகள், வழக்கம் போல சமூக ஊடகங்கள் வாயிலாக நீதி அரசருக்கு எதிரான கருத்துக்களை பரப்பியது. இது தொடர்பாக கருத்து கூறிய ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் Solicitor General Tushar Mehta, நியூட்டன் விதியின்படி, ஒரு வினைக்கு ஒப்பான எதிர்வினை ஏற்படலாம். ஆனால் இன்றைய இந்தியாவில், ஒரு வினைக்கு பல அடுக்கு எதிர்வினை ஏற்படுவது தொடர் கதையாகி வருவது வருத்தம் அளிக்கிறது, என்றார்.

தலைமை நீதியரசர் மீது சனாதனத்தை அடிப்படையாக கூறி காலணி எறிய முற்பட்ட நிகழ்வை தமிழ்நாட்டில் பல அமைப்புகள் கண்டித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணியளவில், வ உ சி நகர், முனீஸ்வரர் நகர், 100 அடி சாலை சந்திக்கும் பெரியார் சதுக்கத்தில் திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads