Hosur Abduction Complaint: Four Arrested After CCTV and UPI Trail, Probe Continues | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Abduction Complaint: Four Arrested After CCTV and UPI Trail, Probe Continues

📅 வெளியீடு நாள்: 12-01-2026

📄 விளக்கம்

Police have arrested four persons in connection with an alleged abduction of a real estate businessman near Hosur. According to the complaint, the victim was taken by individuals posing as police officers and threatened with a ransom demand. He later escaped and lodged a complaint at the Sulagiri police station. CCTV footage and a UPI payment trail reportedly helped police trace the suspects. One more person is said to be absconding.

ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கன்னத்தில் பளார் விட்டு, கடந்த ஜனவரி ஏழாம் நாள் காரில் கடத்திய கும்பல்.

காமன்தொட்டியைச் சேர்ந்த பிரவீன்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அப்பகுதியில் தமது வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகள் அருகே நின்றவரை, காவல் என எழுதிய ஸ்கார்பியோ வண்டியில், காக்கி பேண்ட் அணிந்து வந்தவர்கள், கை விலங்கை காட்டி, விசாரணை செய்ய வேண்டும் என மிரட்டி வண்டியில் ஏற்றியதாக கூறப்படுகிறது.

வண்டியில் ஏற்றிய பின்பு, தாங்கள் அவரை கடத்தி இருப்பதாகவும், 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே விடுவிக்க இயலும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

தர்மபுரி அடுத்த தொப்பூர் வரை அவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர், காமன்தொட்டியில் உள்ள அவரது காரில் பணம் இருப்பதாகவும், தம்மை அங்கே அழைத்துச் சென்றால் பணத்தை எடுத்து தருவதாகவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, வாடகை கார் மூலம் அவரை காமன்தொட்டி அழைத்துச் சென்றனராம். அப்போது அவர் அங்கிருந்து தப்பி ஓடி, ஜனவரி எட்டாம் நாள் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து காவல்துறையினர், தொப்பூர் சுங்கச்சாவடி c c t v காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதில் வாடகை கார் எண் பதிவாகி இருந்துள்ளது. அதை வைத்து வாடகை காரின் ஓட்டுனரை அடையாளம் கண்டு, அவரிடம் வினவியதில், வாடகை பணம் u p i மூலம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.

பணம் செலுத்திய U P I தொலைபேசி எண்ணை கண்டறிந்த காவல்துறையினர், குற்றத்திற்கு மூளையாக செயல்பட்ட ஒருவர் உட்பட மொத்தம் நான்கு நபர்களை கைது செய்தனர். ஸ்கார்பியோ காருடன் மேலும் ஒருவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

திறமையாக புலன் விசாரணை மேற்கொண்ட சூளகிரி காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads