Industries Seek District Collector’s Intervention Over Vegetable Market Activities in Hosur SIPCOT-2 | Hosur News Update - Video
Industries Seek District Collector’s Intervention Over Vegetable Market Activities in Hosur SIPCOT-2
📅 வெளியீடு நாள்: 22-01-2026
📄 விளக்கம்
Industrial units in Hosur SIPCOT Phase II have raised concerns that daily vegetable market activities are affecting industrial roads and factory operations. They allege encroachment, sanitation issues, and reputational damage during client visits. The industries are urging the district administration to intervene and take appropriate corrective measures.
ஓசூர் சிப்காட் இரண்டின் சாலைகளில் காய்கறிச் சந்தை நடவடிக்கைகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுவதால், தங்களின் தொழிற்சாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறும் அப்பகுதி தொழிற்சாலைகள், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
ஓசூர் பத்தலபள்ளியில் இயங்கும் காய்கறி சந்தையின் நடவடிக்கைகள் பெரும்பாலானவை, ஓசூர் சிப்காட் தொழிற்சாலைகளின் சாலைகளை ஆக்கிரமித்து நடைபெறுவதாகவும், காய்களை ஏற்றி வரும் சிலர், தொழிற்சாலை மதில் மற்றும் சாலை ஓரங்களை கழிவறைகளாக பயன்படுத்துவதாகவும் தொழில் நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் உட்பட, தங்களது தொழிற்சாலைகளுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும், இத்தகைய சூழ்நிலைகளை காண்பதால் ஏற்படும் முகச்சுழிப்பு, தங்களின் தொழில் வாய்ப்புகளை பாதிப்பதாக தொழிற்சாலைகள் வேதனை தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சாலைகள் வலியுறுத்துகின்றன.








