From City Development to Village Projects: District Collector Reviews Works Across Hosur | Hosur News Update - Video
From City Development to Village Projects: District Collector Reviews Works Across Hosur
📅 வெளியீடு நாள்: 22-01-2026
📄 விளக்கம்
The Krishnagiri District Collector conducted field inspections across Hosur and nearby areas, reviewing ongoing urban development works, village-level projects, environmental initiatives, and sports infrastructure. The visit focused on assessing progress and identifying improvements needed across multiple sectors.
ஓசூர் நகர்புற வளர்ச்சி முதல் ஊராட்சி திட்டங்கள் வரை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு குறித்து ஒரு விரைவு பார்வை.
ஓசூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, ஈச்சங்கூர் மற்றும் பெல்லத்தூர் ஊராட்சிகளில், உயிர் பூச்சிக்கொல்லி திட்டம் மற்றும் உள்விளையாட்டு அரங்க கட்டுமான திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
சென்னத்தூரில், சமூகப் பொறுப்பு பண உதவியுடன் அரசு புறம்போக்கு நிலங்களை குறுங்காடுகளாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவியல் முறையில் மேற்கொள்ளப்பட்ட குறுங்காடு திட்டத்தை ஆட்சியர் பார்வையிட்டார்.
மேலும், ஓசூர் அந்திவாடியில் உள்ள விளையாட்டு அரங்கில், உள் விளையாட்டு அரங்கம், நீச்சல்குளம் ஆகியவற்றை ஆய்வு செய்து, கூடுதல் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கினார்.








