Hosur Malai Kovil Chariot Festival Schedule Revised Due to Lunar Eclipse | Hosur News Update - Video
Hosur Malai Kovil Chariot Festival Schedule Revised Due to Lunar Eclipse
📅 வெளியீடு நாள்: 22-01-2026
📄 விளக்கம்
Due to a lunar eclipse on March 3, the Hosur Malai Kovil Chariot Festival schedule has been revised. The chariot procession will conclude by 1 PM, Annadhanam will be served until that time, and temple darshan hours will change accordingly. Devotees are advised to plan their visit based on the revised timings.
ஓசூர் மக்கள் கவனத்திற்கு ஒரு முதன்மை தகவல். ஓசூர் மலை கோவில் தேர் திருவிழா முழுநிலா நாளான மார்ச் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. அன்று பிற்பகலில் ஏற்பட இருக்கும் சந்திர கிரகணம் என்கிற நிலா மறைப்பு நிகழ்வினால், தேர் திருவிழா மற்றும் அன்னதானம் வழங்குதல் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் இரண்டாம் நாள் திங்கள்கிழமை, மாலை ஆறு முப்பது மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் துவங்குகிறது.
மார்ச் மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை, காலை ஐந்து முப்பது மணிக்கு துவங்கும் தேரோட்டம், பிற்பகல் ஒரு மணிக்குள் நிறைவடையும்.
அன்னதானம் வழங்குவதை பிற்பகல் ஒரு மணிக்குள் முடித்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு கோவில் நடை சாற்றப்படும். இரவு ஒன்பது முப்பது மணி அளவில், கீழ் கோவில் நடை மட்டும் திறக்கப்படும்.
மறுநாள் காலை 4 மணிக்கு மேல் மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.








