₹30 Lakh Burglary Reported at Honey Valley Layout Near Denkanikottai, Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

₹30 Lakh Burglary Reported at Honey Valley Layout Near Denkanikottai, Hosur

📅 வெளியீடு நாள்: 25-01-2026

📄 விளக்கம்

A complaint has been lodged at Denkanikottai Police Station after burglars allegedly broke into a locked house at Honey Valley Layout near Hosur and stole valuables worth around ₹30 lakh. The homeowner was away for medical treatment. Police have begun an investigation into the incident.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், வீட்டின் பூட்டை உடைத்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு என காவல் நிலையத்தில் புகார். தேன்கனிக்கோட்டை Honey Valley லே-அவுட்டில் குடியிருக்கும் மணிகண்டன், இரண்டு நாட்களுக்கு முன்னதாக குடும்பத்தாருடன் தர்மபுரி தனியார் மருத்துவமனைக்கு மருத்துவம் பார்க்க, வீட்டை பூட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நாள் காலையில் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்த நிலையில் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையே இவரது வீட்டிற்கு அருகே, கார்த்திக் என்பவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு நகை திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நல்லூளாக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமது 30 பவுன் நகைகளை விற்று நிலம் வாங்கினாராம். அதனால் அவரது நகைகள் தப்பியுள்ளன. காவல்துறையினர் வழக்கு பதிந்து வினவி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads