Why Hosur Is Still Experiencing Severe Cold Even After Margazhi | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Why Hosur Is Still Experiencing Severe Cold Even After Margazhi

📅 வெளியீடு நாள்: 25-01-2026

📄 விளக்கம்

Despite the end of the Margazhi season, Hosur continues to face intense winter cold this January. Weather experts cite northern cold winds, clear skies causing night-time heat loss, and Hosur’s high-altitude location as the key reasons behind the drop in temperatures to nearly 12°C.

ஓசூர் மார்கழி முடிந்தும், குளிரில் நடுங்குவது ஏன்?. கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஜனவரியில் ஓசூர் கடுமையான குளிரில் நடுங்கி வருகிறது.

இதற்கு மூன்று வானியல் நிகழ்வுகளை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முதலாவதாக, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வட இந்தியாவில் இருந்து கடுமையான குளிர் காற்று தமிழகம் நோக்கி வருவதால் ஓசூர் குளிரின் தாக்கத்தை நேரடியாக சந்திக்கிறது.

இரண்டாவதாக, வானம் தெளிவாக இருப்பதால், பகலில் பூமியில் ஏற்படும் வெப்பம் விளைவாக வானத்தை நோக்கி எழும்பி சென்று விடுகிறது. இதனால் விடிகாலைப் பொழுதில் கடுமையான குளிர் ஏற்படுகிறது.

மூன்றாவதாக, ஓசூருக்கு இயற்கை தந்த வரம். அதாவது சுமார் 2700 அடி உயரத்தில் ஓசூர் டெக்கான் சமவெளியில் அமைந்திருப்பதால் இயற்கையான குளிர்.

மூன்றும் ஒன்றிணைந்து செயல்படுவதால் காலை நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து, ஓசூரை குளிரில் நடுங்க வைக்கிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads