Questions Raised Over Pending Electricity and Basic Facilities in PM JANMAN Housing Project | Hosur News Update - Video
Questions Raised Over Pending Electricity and Basic Facilities in PM JANMAN Housing Project
📅 வெளியீடு நாள்: 18-06-2026
📄 விளக்கம்
Residents of a PM JANMAN housing project near Kottaiyur say that while some families have moved into their new homes, electricity connections and other basic facilities remain incomplete.
"பி எம் ஜன்மன்" திட்டத்தில் கட்டப்பட்ட, பழங்குடியின பயனாளிகளுக்கான வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் தயக்கம் ஏன்?.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், உரிகம் அடுத்த கோட்டையூர் அருகே, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பழங்குடியின மக்களுக்கு சுமார் 24 வீடுகள், இந்திய அரசின் "பி எம் ஜன்மன்" திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீடும் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால், நூறு ஒந்து சாமி மலை கோவில் நிலங்களில் குடியிருந்து வாழ்வாதாரம் தேடி வரும் இருளர் பழங்குடியின மக்கள் பயனடைவார்கள்.
திட்டம் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆன பொழுதும், அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்படாத நிலையில், ஐந்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த வீடுகளில் தங்கள் குடும்பத்தாருடன் குடியேறி விட்டார்கள்.
மின் கம்பங்கள் உள்ளன, ஆனால் நடப்படவில்லை. ஆழ்துளை கிணறு உள்ளது, நீரூந்தி பொருத்தப்பட்டுள்ளது, ஆனால் மேல்நிலைத் தொட்டி இல்லை. வீடுகளுக்கு கழிவறை உள்ளது, ஆனால் கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவு மற்றும் தண்ணீருக்கான தொட்டி இல்லை. வீடுகளுக்கு மின்சாரமும் வழங்கப்படவில்லை. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் குழாய்கள் என எதுவும் இல்லை.
இத்தகைய அடிப்படை குடியிருப்பு தேவைகளை வழங்குவதற்கு எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி செயல்படுத்த வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க "வட்டார வளர்ச்சி அலுவலர்" என தெள்ளத் தெளிவாக இந்திய அரசின் கொள்கை அறிவிப்பு உள்ளது.
மாவட்ட ஆட்சியர் உதவுவார் என நம்பிக்கையுடன் இரவு நேர இருளில், இருளர் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.








