Krishnagiri Collector Calls Kelamangalam Doctor His Role Model; 160 Tribal Students Receive Birth Certificates | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Krishnagiri Collector Calls Kelamangalam Doctor His Role Model; 160 Tribal Students Receive Birth Certificates

📅 வெளியீடு நாள்: 22-07-2026

📄 விளக்கம்

A memorable moment unfolded in Bettamugilalam when the Krishnagiri District Collector publicly described Dr. Rajesh Kumar, Block Medical Officer of Kelamangalam, as his "role model", recognising the doctor's sustained efforts to help tribal schoolchildren obtain birth certificates.

During the event, around 160 tribal students received birth certificates through the coordinated efforts of the district administration. The Collector also announced a ₹7.5 crore allocation for the Ayyur–Bettamugilalam forest road and provided an update on the ongoing Thozhuva Malai road project.

"எனக்கு ரோல் மாடல் இவர்தான்..." கெலமங்கலம் மருத்துவரை மாவட்ட ஆட்சியர் ஏன் பாராட்டினார்?

கடந்த நாள் காலை, ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, பெட்டமுகிலாலம் வட்டத்திற்கு உட்பட்ட, காமகிரி சித்தாபுரம் அரசு பள்ளியில் நடைபெற்ற பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மலைவாழ் மக்கள், குறிப்பாக பள்ளி மாணாக்கர்கள், பிறப்புச் சான்றிதழ் இல்லாமல், பிற சான்றிதழ்கள் பெற இயலாத சூழல் நிலவியது. நீண்ட நாட்களாக தங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தச் சூழலில், கெலமங்கலம் வட்டார மருத்துவர் ராஜேஷ் குமார், இதற்காக தொடர்ந்து முயற்சித்து வந்தார். ஓசூர் சார் ஆட்சியர் அக்ரிதி சேதி, மலைவாழ் மக்களின் துன்பங்களை உணர்ந்து, பள்ளி மாணாக்கர்களின் வருங்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து, சுமார் 160 மாணாக்கர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பிறப்புச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்தார்.

இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர், "பலவற்றில் எனக்கு ரோல் மாடலாக இப்பகுதியில் பணியாற்றி வரும் மருத்துவர் ராஜேஷ் குமார் திகழ்கிறார்" என்று பாராட்டினார். இந்த பாராட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

பிறப்புச் சான்றிதழ் பெற்ற மாணாக்கர்கள், உடனடியாக தங்களுக்கான ஆதார், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அய்யூர் பெட்டமுகிலாலம் இடைப்பட்ட காட்டு வழி மலை சாலையை சீரமைக்க ஏழரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி விரைவில் துவங்க இருப்பதாக தெரிவித்தார்.

தொழுவ மலை செல்லும் சாலை பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தரமான சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads