Does Hosur Really Need a Passenger Airport? Should TAAL Become an Air-Cargo Hub? | Hosur News Update - Video
Does Hosur Really Need a Passenger Airport? Should TAAL Become an Air-Cargo Hub?
📅 வெளியீடு நாள்: 24-08-2026
📄 விளக்கம்
Hosur's rapid industrial growth has renewed the question of whether the city needs its own passenger airport.
However, with Bengaluru Airport approximately 70 kilometres away and STRR expected to reduce travel time between Hosur and the airport, another question emerges: would a new passenger airport requiring around 2,000 acres of agricultural land be the most economically useful first step?
Hosur also has another major opportunity. The region is a significant centre for cut-flower production and exports, while Krishnagiri and Dharmapuri produce large quantities of vegetables for international markets.
Much of this agricultural cargo currently moves through Bengaluru and Kochi.
Could the existing TAAL airport instead be developed into an air-cargo infrastructure serving the agricultural and industrial economy of Hosur, Krishnagiri and Dharmapuri?
Perhaps the question is not simply “Does Hosur need an airport?”, but “What kind of airport infrastructure would benefit Hosur the most?”
ஓசூருக்கு உண்மையிலேயே விமான நிலையம் தேவையா? ஓசூரை சுற்றிலும் தொழில்துறை வளர்ச்சி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த கேள்வி இப்போது ஏன் எழுகிறது? அரசியல் சூழல் மாற்றங்களாலா?
ஓசூருக்கு விமான நிலையம் வேண்டும்... ஆனால் ஓசூருக்கு தேவைப்படுவது பயணிகள் விமான நிலையமா?
ஓசூரில் பயணிகள் விமான நிலையம் அமைப்பதற்கு சில அடிப்படை சவால்கள் உள்ளன.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் பெங்களூரு விமான நிலையம் ஆகியவை ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
பெங்களூரு விமான நிலையம் ஓசூரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு செல்வதற்கான மிகப்பெரிய தடையாக இருப்பது பெங்களூரு நகர போக்குவரத்து நெரிசல்.
STRR சாலை பணிகள் நிறைவடைந்தால், ஓசூருக்கும் பெங்களூரு விமான நிலையத்திற்குமான பயண நேரம் பெருமளவு குறைந்து விடும்.
இத்தகைய சூழலில், பயணிகளுக்கான விமான நிலையத்தை ஓசூரில் சுமார் 2000 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தி அமைப்பது என்பது பொருளாதார ரீதியாக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால்... ஓசூருக்கு விமான நிலையம் தேவையே இல்லை என்று இதனால் சொல்லிவிட முடியுமா?
இங்கேதான் ஓசூரின் மற்றொரு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.
நாள் ஒன்றுக்கு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் காய்கறிகள் ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது.
கொய்மலர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறப்பிடம் கொண்டுள்ளது ஓசூர்.
இவை பெரும்பாலும் பெங்களூரு மற்றும் கொச்சின் நகரங்கள் வழியாக ஏற்றுமதியாகிறது.
அப்படியானால்...
ஓசூருக்கு முதலில் பயணிகள் விமான நிலையமா தேவை? ஏற்கனவே இருக்கும் TAAL விமான நிலையத்தை பயன்படுத்தி, ஒரு சரக்கு விமானப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்துவது தானே சரியான முதல் படி?
இதனால், ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் விளை பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான மக்கள் பொருளாதார அடிப்படையில் முன்னேறுவதற்கான வாய்ப்பாக அமையும்.
இது தொடர்பில் தமிழ்நாடு அரசு விரைந்து கவனம் செலுத்துமா?








