Garbage dump near Hosur Corporation boundary — Corporation and Panchayat disagree over responsibility | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Garbage dump near Hosur Corporation boundary — Corporation and Panchayat disagree over responsibility

📅 வெளியீடு நாள்: 24-08-2026

📄 விளக்கம்

Residents of Bismillah Nagar and Hemagiri Layout near Hosur have raised concerns over a garbage dump beside the Alasanatham–Kelavarapalli road.

A signboard welcoming people to Hosur Corporation stands close to the location. Residents who pay taxes to Hosur Corporation say they requested the civic body to clear the garbage but were reportedly told that the responsibility belongs to Kelavarapalli Panchayat.

HosurOnline contacted Kelavarapalli Village Administrative Officer Ramesh and Panchayat Secretary Suresh to obtain their response. They provided their explanation and supporting material regarding the administrative boundary and responsibility for the location.

The issue raises a basic civic question: Where exactly is the boundary, and which local body is responsible for clearing the garbage?

தனது எல்லையை தொலைத்த ஓசூர் மாநகராட்சி! "வரியை மட்டும் வாங்கிக் கொண்டு, ஓசூர் மாநகராட்சி குப்பையை அகற்ற மறுப்பது மோசடிக்கு ஒப்பானது" எனக் கூறுகின்றனர் தன்னார்வலர்கள்.

அலசநத்தத்திலிருந்து கெலவரப்பள்ளி செல்லும் சாலையில் பிஸ்மில்லா நகர் மற்றும் ஹேமாகிரி லேஅவுட் ஆகிய குடியிருப்பு பகுதிகள் ஓசூர் மாநகராட்சி எல்லை பகுதியில் அமைந்துள்ளன.

"ஓசூர் மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற வரவேற்பு அறிவிப்பு பலகை அருகே, சாலை ஓரத்தில் நாற்றம் அடிக்கும் குப்பை மேடு ஒன்று உள்ளது.

அப்பகுதி மக்கள் ஓசூர் மாநகராட்சிக்கு வரி செலுத்தி வருவதால், குப்பைகளை அகற்ற மாநகராட்சியை வலியுறுத்தியுள்ளனர். நீங்கள் ஓசூர் மாநகராட்சிக்கு வரி செலுத்தினாலும், குப்பையை அகற்ற வேண்டிய பொறுப்பு கெலவரப்பள்ளி ஊராட்சியினுடையது என தட்டிக் கழித்து வருகிறது ஓசூர் மாநகராட்சி நிர்வாகம்.

இது தொடர்பாக, ஓசூர் ஆன்லைன் சார்பில், கெலவரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் மற்றும் பஞ்சாயத்து செயலாளர் சுரேஷ் ஆகியோரை நேரில் சந்தித்து வினவினோம்.

அவர்கள் மிகத் தெளிவான பதிலை எமக்கு தெரிவித்தனர். அதாவது, ஓசூர் மாநகராட்சி, தங்களுக்கு தோதான, அதே வேளையில் எல்லையை விட்டு சற்று தள்ளி தவறான இடத்தில் வரவேற்பு பலகை நட்டு விட்டு, இப்படி பொறுப்பை பொறுப்பற்று தட்டிக் கழிக்கிறார்கள். தனக்கு வரி செலுத்தும் மக்களுக்கு மட்டுமல்லாமல், அந்தச் சாலையை பயன்படுத்தும் கெலவரப்பள்ளி ஊராட்சி மக்களுக்கும் தீங்கிழைத்து வருகிறது ஓசூர் மாநகராட்சி" என திட்டவட்டமாக ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads