Hosur Drug Smuggling: 39 Kg Ganja, ₹6 Crore Methamphetamine Seized in Back-to-Back Operations | Hosur News Update - Video
Hosur Drug Smuggling: 39 Kg Ganja, ₹6 Crore Methamphetamine Seized in Back-to-Back Operations
📅 வெளியீடு நாள்: 31-08-2026
📄 விளக்கம்
Police have intercepted multiple alleged drug-smuggling attempts involving Hosur. SIPCOT police seized 39 kg of ganja from an omni bus at the Zuzuvadi checkpost on August 29 and arrested two people. Methamphetamine reportedly worth around ₹6 crore was subsequently seized from another omni bus at the same checkpost. Railway police also seized 1 kg of ganja from a passenger on a train passing through Hosur. Police are investigating the network behind the alleged smuggling attempts.
ஓசூர் காவல்துறையினர் அதிரடி! அடுத்தடுத்து சிக்கும் போதை பொருட்கள்!
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் நாள் ஆம்னி பேருந்தில், சரக்குகள் வைக்கும் பகுதியில் பைகளுக்குள் மறைத்து கடத்த முயன்ற சுமார் 20 லட்சம் மதிப்பிலான 39 கிலோ கஞ்சாவை, ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் காவல்துறையினர் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
அதே சோதனைச் சாவடியில், கடந்த நாள் ஆம்னி பேருந்தில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று ரயிலில் ஒரு கிலோ கஞ்சா கடத்த முயன்ற ஒருவரும் பிடிபட்டுள்ளார்.
இந்த கடத்தல்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








