Thally Land Dispute: Survey Number Changes Put Historic Temples Under Waqf Claim, Say Residents | Hosur News Update - Video
Thally Land Dispute: Survey Number Changes Put Historic Temples Under Waqf Claim, Say Residents
📅 வெளியீடு நாள்: 10-09-2026
📄 விளக்கம்
A controversy over changes in land survey numbers has triggered protests in Thally near Hosur. Residents allege that changes made around nine months ago have resulted in around 950 buildings and land parcels, including historically significant temples and privately owned properties, being shown as Waqf properties.
The dispute has also raised questions over the historical Shiva and Venugopala Swamy temples in Thally, which are under the HR&CE Department.
Residents observed a complete shop shutdown and staged a road blockade, demanding government intervention and clarification of the disputed land records.
The claims regarding ownership and Waqf status are disputed and require verification through official records and statements from the concerned authorities.
ஓசூர் அடுத்த தளியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒய்சாளர்களும், விஜய நகர பேரரசர்களும், இஸ்லாமியர்களின் வக்பு வாரிய நிலத்தில் சிவாலயம் மற்றும் வேணுகோபால சுவாமி ஆலயம் கட்டினார்களா?
திடீரென கடந்த 9 மாதங்களுக்கு முன் நில அளவை எண்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தினால், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, டிவிஎஸ் நிறுவனம் மேம்படுத்திக் கொடுத்த இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள், வக்பு வாரிய நிலத்தில் கட்டப்பட்டது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
"ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வக்பு வாரியம் என்ற ஒன்றே இல்லை" என இஸ்லாமியர் ஒருவர் எமக்கு சுட்டிக்காட்டினார்.
திடீர் நில அளவை எண் மாற்றத்தை கண்டித்து, முழு கடையடைப்பு மற்றும் சாலை மறியல் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தளி பொதுமக்கள்.
இது குறித்து ஓசூர் ஆன்லைனிடம், தளி பகுதியில் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாத்து வரும் முத்தவல்லி கூறும் பொழுது, தருமபுரி மற்றும் சென்னையில் வக்பு வாரிய தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளால், சமூக நல்லிணக்க சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
9 கட்டிடங்கள் வக்பு வாரிய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய நிலையில், வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 950 கட்டிடங்கள் மற்றும் நிலங்கள், இந்த எண் மாற்றத்தினால் வக்பு வாரிய சொத்தாக திடீரென மாறி உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் அப்பகுதி மக்கள்.
அரசின் மெத்தனப்போக்கு, தேவையற்ற மத ரீதியான மோதல்களுக்கு வழிவகுக்கும், என நம்மிடம் பேசிய அனைத்து தரப்பினரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். முதலமைச்சர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, தளியில் நூற்றாண்டுகளாக நிலவி வரும் மத நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.








