Road Safety Concerns After Protest Near Hosur–Karnataka Border against Tamil Nadu | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Road Safety Concerns After Protest Near Hosur–Karnataka Border against Tamil Nadu

📅 வெளியீடு நாள்: 18-01-2026

📄 விளக்கம்

Concerns over road safety have emerged near the Hosur–Karnataka border after a protest was held in support of actions alleged to violate traffic rules. Travellers claim that certain vehicles displaying oversized flags pose accident risks on national highways. With calls for strict enforcement growing, many motorists say safe travel must be prioritised.

ஓசூர் கர்நாடகா எல்லையில், சாலை விதி மீறல் செயல்களுக்கு ஆதரவாக சிலர் ஆர்ப்பாட்டம்!.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்பன் நம்பிக்கையாளர்கள், ஓசூர் - தமிழ்நாடு வழியாக கேரளாவிற்கு ஆயிரக்கணக்கான வண்டிகளில் நாள்தோறும் பயணிக்கின்றனர்.

ஓசூர் வழியாக இப்படி பயணிக்கும் வண்டிகளில், ஏதாவது ஒன்றில், தாம் பயணிக்கும் வண்டியின் அளவைக் காட்டிலும் மிகப்பெரிய கொடியை, கர்நாடகா கொடி என்கிற பெயரில் முகப்பில் கட்டிக்கொண்டு செல்வது, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பிறருக்கு விபத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக, சாலைகளில் பயணிக்கும் பிற பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு காவல்துறையினர், இத்தகைய சாலை விதி மீறல் வண்டிகளை பறிமுதல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சாலை விதிமீறல் மற்றும் பிற பயணிகளின் உயிருக்கு விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கான அச்சுறுத்தல் என்பதை உணராத சிலர், இன்று முற்பகலில், அத்தகைய விதி மீறல்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பிய படி ஓசூர் - அத்திப்பள்ளி எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய, சட்டத்திற்கு புறம்பான மற்றும் பிறர் உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது சாலையில் பாதுகாப்பான பயணம் வேண்டும் என கருதும் பயணிகள் அச்சுறுத்தலாக இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads