ஓசூர் நகர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பங்கெடுத்த, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள். ஓசூர் நகர் மாநகராட்சி மன்றத்தில் பேசிய ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்கள், முதலமைச்சரின் கொள்கையான, எல்லோருக்கும் எல்லாம், என்பதற்கு ஏற்ப, ஓசூரில் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
கூட்டத்தில் பங்கெடுத்த பல்வேறு நகர்மன்ற உறுப்பினர்கள், சில வார்டு பகுதிகளுக்கு ஓசூர் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெறுவதாகவும், தங்களது பகுதியில் எவ்வித வளர்ச்சி பணியும் மேற்கொள்ளப்படுவது இல்லை எனவும் குறைபட்டுக் கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாநகராட்சி மன்ற உறுப்பினர் சென்னீரப்பா அவர்கள், குடியிருப்பு பகுதிகளில் சுற்றி தெரியும் நாய்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சில பகுதிகளில், 25 நாய்கள் முதல் 100 நாய்களுக்கு மேலும் ஒரே இடத்தில் சுற்றி திரிவதாக குறிப்பிட்டார். இப்படி கூட்டமாக சுற்றி தெரியும் நாய்கள், இரவு நேர பணி முடிந்து, வீடு திரும்பும் ஊழியர்களை, தாக்குவதாக வேதனை தெரிவித்தார். சுற்றி தெரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், அவற்றின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை காக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓசூர் மாநகராட்சியை வலியுறுத்தினார்
ஓசூர் நகரின் அடிப்படை தேவைகளான, குடிநீர், சாலை மேம்பாடு, அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியவர்களுக்கு நிரந்தர வீடு போன்ற மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்கள் தெரிவித்தார். தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக, விரைந்து ஓசூர் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி அவையில் உறுதியளித்தார்.








