கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழ் நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு. மானாக்கர்களுக்கு ஓசூர் ஆன்லைன் சார்பில் நல்வாழ்த்துக்கள்.
கடந்த நாள் பிறந்த நாள் விழா கண்ட நமது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஒய் பிரகாஷ் அவர்களுக்கு ஓசூர் ஆன்லைன் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் விழா கண்ட டிவிஎஸ் தொழிற்சங்க தலைவரும், தமிழ்நாடு ஐ என் டி யு சி செயல் தலைவருமான திரு ஆர் குப்புசாமி அவர்களுக்கு ஓசூர் ஆன்லைன் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வரும் செப்டம்பர் 19 முதல் 21 வரை, ஓசூர் ஓட்டல் ஹில்ஸ், கன்வென்ஷன் சென்டரில், டெக் எக்ஸ்போ நடைபெற இருக்கிறது. சுமார் இருனூற்று ஐம்பது நிறுவனங்கள் பங்குபெறும் இந்த சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கெடுக்க விரும்புவோர், முனைவர் திரு இராமலிங்கம் அவர்களை 94432 26435 என்ற எண்ணல் தொடர்பு கொள்ளவும்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு போச்சம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஐந்து கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அஞ்செட்டி காட்டு பகுதியில் ஏழு வயது பெண் யானையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், கடந்தநாள் பதினான்கு வயதுடைய பெண் யானையின் உடல், பாதி அழகிய நிலையில், உரிகம் காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. யானைகளின் தொடர் மரணச் செய்தி, உயிரின பாதுகாப்பு ஆர்வலர்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஊர்களில், ஊர் பெயர் பலகைகள் தமிழில் இடம் பெற வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை.
சூளகிரி அடுத்த உலகம் கூட்டூர் என்ற இடத்தில், ஆற்றில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், தீயணைப்பு துறையினர் தேடி வருவதாகவும் செய்தி.
ஓசூர் அடுத்த கோபச்சந்தரம் அருகே சாலை விபத்தில், இருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் ஒருவர் பலி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஓசூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.








