ஓசூருக்கு விமான நிலையம் வராது, என்று எதிர்மறையாக கருதுபவர்கள் தயவு செய்து இந்த காணொளியை பார்க்க வேண்டாம்!. ஓசூரின் வரலாற்றை மாற்றக்கூடிய பெரிய செய்தி இது… விமான நிலையம் மட்டும் இல்லை… அதைவிட பெரிய திட்டம் வருகிறது!. ஓசூரின் அடுத்த கட்ட வளர்ச்சி, இப்போது துவங்குகிறது.
பிற ஊடகங்களில் வரும், “உதான் திட்டத்திலிருந்து ஓசூர் நீக்கம்“ போன்றவை இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய செய்திகள். தமிழ்நாடு முதலமைச்சர், ஓசூர் விமான நிலையம் அமைப்பதில் முழு முனைப்பு காட்டி வருகிறார்.
ஓசூர் அடுத்த பாகலூர் அருகே, மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் போர் விமானம் உற்பத்தி தொழிற்சாலை உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்பு ஏற்படுத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
முதலில், ஓசூர் விமான நிலையம் திட்டமிடப்பட்டுள்ள பரப்பளவு சுமார் மூவாயிரம் ஏக்கர். இதில் விமான நிலையத்துடன், D R D O ஆராய்ச்சி மற்றும் தொழிற்சாலை திட்டங்கள், A M C A போர் விமான உற்பத்தி தொழிற்சாலை, பறக்கும் பொருட்களை கண்காணிக்க நேத்ரா கண்காணிப்பு நடுவம், இவை தொடர்பான புதிய தொழில் நுட்பங்கள் சார்ந்த பின் நாட்களில் கண்டறியக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகள், விமான நிலையம் சார்ந்த சேவைகள் மற்றும் தொழிற்சாலைகள் என மிகப் பெரிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட இருக்கிறது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு நிலம் பயன்படுத்த இருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
இதில் பலவணபள்ளியில் 788 ஏக்கர், முத்தாலியில் 432 ஏக்கர், அத்வனபள்ளியில் 498 ஏக்கர், தாசப்பள்ளியில் 125 ஏக்கர், பெரியமுத்தாலியில் 119 ஏக்கர், அட்டூரில் 71 ஏக்கர், அலேநத்தத்தில் 384 ஏக்கர், காருப்பள்ளியில் 220 ஏக்கர், நந்திமங்கலத்தில் 77 ஏக்கர், சூடகொண்டபள்ளியில் 1 ஏக்கர், வெங்கடேசபுரத்தில் 98 ஏக்கர், மிடுதேபள்ளியில் 167 ஏக்கர் என அரசுக்குரிய மற்றும் தனியார் நிலங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இந்தத் திட்டத்திற்கான பணிகள் விரைவில் துவங்கும் என உறுதியாக நாம் நம்புவோம்.








