மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி என்றால், ஓசூர் வனத்துறையினருக்கு எல்லா பக்கமும் அடி!
வனத்துறையினரின் அகழி தோண்டும் நடவடிக்கைகளை கண்டித்து, ஏ ஐ கே எஸ் சார்பில், கடந்த நாள் அஞ்செட்டி வனத்துறை அலுவலகம் முன்பு, முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
ஓசூர் காடுகளில் சுமார் 200 யானைகள் மற்றும் பல காட்டு விலங்குகள் வாழ்கின்றன.. யானைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வலசைப் பாதைகளை, மனிதர்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து விட்டனர்.. அதன் விளைவாக, யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இதனால் பாதிக்கப்படும் பட்டா நில உழவர்கள், “யானைகளின் பாதையை முறைப்படுத்துங்கள்” என்று வனத்துறையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தொங்கும் மின் வேலி, அகழி தோண்டும் பணிகள் என வனத்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், பட்டா வழங்கப்படாத காட்டு நிலங்களில், பல ஆண்டுகளாக உழவு செய்து வாழும் பழங்குடியினரும் பிற மக்களும்,
“இந்த அகழி தோண்டும் பணியால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பொதுவான மனநிலையில் நின்று பார்த்தால், வனத்துறையின் நடவடிக்கையும் சரி… போராட்டத்தின் நோக்கமும் சரி.
இந்த சிக்கலுக்கு தீர்வு எது? உங்கள் கருத்தை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.








