The annual Hosur Hill Temple Ther Festival commenced at approximately 6:20 AM from the Ther Nilayam in the historic Soodavadi locality, now known as Therpettai.
The Vinayagar Ther was pulled first through the streets, followed by the Chandira Choodeswarar Ther. After reaching designated points, the Thayar Ther began its procession.
Large crowds gathered to witness the historic festival. As a precautionary measure, power supply was suspended in the ther-route areas from 6 AM onward.
Police personnel ensured comprehensive security arrangements, supported by Traffic Wardens managing crowd flow and traffic. Hosur Corporation sanitation workers were stationed along the route to maintain cleanliness, promptly clearing waste left by devotees.
Engineering students from the Anekal region of Karnataka volunteered in safety arrangements. The procession was scheduled early considering the lunar eclipse occurring today.
ஓசூர் மலை கோவில் தேர் நிலையிலிருந்து முதலில் இழுக்கப்பட்டு நகரும் அற்புதமான ட்ரோன் காட்சி - ஓசூர் ஆன்லைன் Exclusive.
ஓசூரின் வரலாற்றுப் பெயர் "சூடவாடி". இன்று "தேர்பேட்டை" என்று வழக்கில் அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க இந்த "சூடவாடி" தெருகளில், காலை ஆறு இருபது மணி அளவில் தேர் இழுக்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
சூடவாடி தெருக்களில் முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சந்திர சூடேஸ்வரர் தேர் பயணித்தது. முதலில் இழுக்கப்பட்ட இரண்டு தேர்களும், குறிப்பிட்ட நிலைகளை அடைந்த பின், தாயார் தேர் இழுக்கப்பட்டு வலம் வந்தது.
ஓசூர் மலைக்கோவிலின் தேர் திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். பாதுகாப்புக் கருதி தேரோடும் தெருக்கள் அமைந்துள்ள பகுதிகளில், மின் நிறுத்தம், காலை ஆறு மணி முதலே மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறையினரால் மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. காவல்துறையினருக்கு துணையாக, Traffic Warden-கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் தங்களால் ஆன பாதுகாப்பு பணிகளை வழங்கினர். அதே வேளையில், ஓசூர் உள்ளூர் கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் ஆர்வமுடன் இத்தகைய நிகழ்வுகளில் பொது தொண்டாற்ற முனையாதது தன்னார்வலர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது.
ஓசூர் மாநகராட்சி சார்பில், தூய்மை பணியாளர்கள் தேரோடும் தெருக்களில் நிலை நிறுத்தப்பட்டிருந்தனர். தேர் திருவிழாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் விட்டுச் செல்லும் கழிவு பொருட்கள், உடனுக்குடன் அகற்றப்பட்டு, தேரோடிய தெருக்களின் தூய்மையை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது.
இன்று சந்திர கிரகண நாள் என்பதால், தேரோட்டம், காலை ஆறு இருபது மணிக்கு துவங்கி, விரைவாக தேர் நிலையை அடையும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.








