Title
93 வயது பெண் மருத்துவர் உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவம் பயின்ற மருத்துவர்கள், ஓசூர் மலை காடுகளின் நடுவே அமைந்துள்ள பெட்டமுகிலாளம் அருகே, காமகிரி என்ற ஊரில், பழங்குடி மற்றும் பிற மலைவாழ் மக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அறுவை மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவங்களை, முற்றிலும் விலையில்லாமல் வழங்கும், உயரிய மக்கள் பணி.
இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர் ஜெயச்சந்திரன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் குறித்த ஒரு பார்வை.
Introduction to Dr. Jayachandran
விளம்பர ஓசையின்றி மேற்கொள்ளப்படும் இந்த மகத்தான தொண்டுக்கு பின்னால் நிற்கும் மனிதர், மருத்துவர் ஜெயச்சந்திரன். இவர் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன்.
நகர வாழ்க்கையின் சுகங்களை விட்டு, 1988ஆம் ஆண்டிலிருந்து, இந்த மலைப்பகுதியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட மலை ஊர்களுக்கு மருத்துவ தொண்டாற்றி வருகிறார்.
About the Remote Villages
அய்யூர் காட்டின் நடுவே அமைந்துள்ள ஊர்கள் பெட்டமுகிலாலம் மற்றும் கொடகரை. அதனை சுற்றி 50க்கும் மேற்பட்ட சிற்றூர்கள். மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைக்காக, தமிழ்நாடு அரசு துவக்க நிலை நல நடுவம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் சூழலில், நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களுக்கு உயரிய மருத்துவம், விலையில்லாமல், உயர் மருத்துவம் பயின்ற மருத்துவ குழுவினர் உதவியுடன் செய்து வருகிறார் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் மருத்துவர் ஜெயச்சந்திரன்.
Family Support
இந்த மருத்துவப் பணியில் மருத்துவர் ஜெயச்சந்திரன் மட்டும் இல்லை. அவருடன் அவரது மனைவி — ஒரு பத்தாலஜிஸ்ட். அவரது சகோதரர் — ஒரு பொறியாளர். ஒரு குடும்பமே இந்த சேவையை முன்னெடுத்து வருகிறது.
Global Doctors Coming to Serve
இந்த மலைப்பகுதி ஊர் மக்களுக்கு மருத்துவ தொண்டாற்ற, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது, இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் இருந்து, சிறப்பு மருத்துவம் பயின்ற மூத்த மருத்துவர்கள் வருகிறார்கள்.
Urologists, Oncologists, Gynaecologists, Gastroenterologists என சிறப்பு மருத்துவர் குழுவினரின் பட்டியல் எண்ணில் அடங்காமல் நீண்டு கொண்டே போகிறது.
அவர்களுடன், விலை மதிப்பு மிக்க மருத்துவ கருவிகளையும் கொண்டு வருகிறார்கள். அது மட்டுமல்ல. தங்களது மருத்துவ உதவியாளர்களையும் அழைத்து வருகிறார்கள்.
Simple Accommodation
ஆனால் இங்கே அவர்களுக்கு ஐந்து நட்சத்திர தரத்திலான தங்குமிடம் இல்லை. ஒரு சிறிய பத்துக்கு பத்து அறை… ஒரு இரும்பு கட்டில்… ஒரு விசிறி… ஒரு விளக்கு… அவ்வளவுதான்.
இருப்பினும், அவர்கள் இங்கே வருவது ஒரு நோக்கத்திற்காக மட்டுமே… மக்களுக்கான பணி.
Wednesday Diagnosis System
ஒவ்வொரு புதன்கிழமையும் பெங்களூருவில் இருந்து மருத்துவர் ஜெயச்சந்திரன் மருத்துவமனைக்கு வருகிறார்.
அன்று, பல ஊர்களில் இருந்து பல்வேறு மருத்துவத் தேவை உள்ளவர்கள் வருகிறார்கள்.
அவர்களை மருத்துவ ஆய்வு செய்து, யாருக்கு அறுவை மருத்துவம் அல்லது பிற சிறப்பு மருத்துவ தேவை உள்ளது என கண்டறியப்படுகிறது.
அதற்கேற்ப, சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுக்கள், இங்கே வருகிறார்கள்.
Free Treatment
இந்த மருத்துவமனையின் மிகப் பெரிய சிறப்பு என்ன தெரியுமா?
இங்கே ஒரு ரூபாய் கூட கட்டணம் பெறுவது இல்லை.
மருத்துவ ஆலோசனை… மருந்து… அறுவை மருத்துவம்… அறுவை மருத்துவத்திற்கு பின் தங்கும் வசதி…
எல்லாமே முழுமையாக இலவசம்.
சில நேரங்களில், ஒரு அறுவை சிகிச்சையின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
Unique Canteen System
இங்கே உள்ள உணவகம் முற்றிலும் மாறுபட்டதாக திகழ்கிறது.
உணவு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஆனால் கையில் பணத்தை வாங்கும் பழக்கம் இல்லை.
அதற்குப் பதிலாக ஒரு பெட்டி மட்டும் வைக்கப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் அதில் பணத்தை போடலாம்.
கையில் பணம் இல்லாதவர்கள்?. அடுத்த முறை வரும்போது பெட்டியில் போடலாம்.
Closing
ஒரு மருத்துவர்… ஒரு குடும்பம்… ஒரு மருத்துவமனை…
ஆனால் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு நம்பிக்கையாக மாறிய மருத்துவத் தொண்டு.
1988 முதல் இன்றுவரை…
மலைகளின் நடுவில் மனிதநேயத்தின் ஒரு ஒளிவிளக்கு போல நிற்கிறது இந்த மருத்துவமனை.








