இறந்தவரின் உடலை தவறான குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததற்கு மருத்துவமனை பொறுப்பேற்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

இறந்தவரின் உடலை தவறான குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததற்கு மருத்துவமனை பொறுப்பேற்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

கடந்த 2009-ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த புருஷோத்தமன், காந்தி ஆகியோரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் போது இருவரது உடல்களும் மாற்றி ஒப்படைக்கப்பட்டது.

புருசோத்தமனின் வாரிசுகள் பி.ஆர்.ஜெயசிறீ மற்றும் பி.ஆர்.ராணி ஆகியோர் தொடுத்த வழக்கின் தீர்ப்பாக, அவர்களுக்கு 12 சதவீத வட்டியுடன் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மாநில நுகர்வோர் ஆணையம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. 

ஆனால், இதை எதிர்த்து மருத்துவமனை தாக்கல் செய்த மனுவில், புருசோத்தமனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், மாநில நுகர்வோர் ஆணையத்தின் சட்ட உதவிக் கணக்கில் ரூ.25 லட்சமும் செலுத்த தேசிய ஆணையம் உத்தரவிட்டது.

இதை கேள்விக்குட்படுத்தி மருத்துவமனை மற்றும் புருசோத்தமனின் வாரிசுகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது, நீதியரசர் இமா கோலி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இப்போது புருசோத்தமனின் குடும்பத்திற்கு மட்டும் ரூ.25 லட்சம் வழங்க மருத்துவமனை உத்தரவிட்டது. அதே வேளையில், உச்ச நீதிமன்றம் வட்டியை 7.5 விழுக்காடாக குறைத்தது.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: