Hosur Snakebite Healer Claims 2,000+ Treatments: Should Traditional Plant Knowledge Be Scientifically Studied? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Snakebite Healer Claims 2,000+ Treatments: Should Traditional Plant Knowledge Be Scientifically Studied?

📅 வெளியீடு நாள்: 25-08-2026

📄 விளக்கம்

Madhappan, who lives near Bettamugilalam in the Hosur region, says he has been treating snakebite victims for nearly 30 years using leaves from plants found locally.

He claims to have treated more than 2,000 people and says only two deaths occurred among those he treated. Residents in the area also support his account.

However, snakebite is a medical emergency and immediate hospital treatment is essential. Antivenom remains the established specific treatment for venomous snake envenoming when medically indicated, and traditional remedies should never delay emergency medical care.

The story raises a different question: Should traditional plant-based medical knowledge be subjected to rigorous scientific research?

If plants used in traditional practices contain pharmacologically useful compounds, systematic research could potentially identify them and contribute to future medical discoveries.

The objective should neither be to blindly accept traditional claims nor dismiss them without investigation — but to test them scientifically.

ஓசூர் அருகே, பாம்பு கடித்த 2000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்து, உயிரை காப்பாற்றியதாக கூறும் இவரது கருத்துக்களை கேட்கலாமா?

பெட்டமுகிலாலம் அருகே, கம்பாலம் எனும் பகுதியில், பாறை முகட்டில் குடில் அமைத்து வாழ்ந்து வருகிறார் மாதப்பன். அருகில் கிடைக்கும் செடிகளின் இலைகளை பயன்படுத்தி கடந்த 30 ஆண்டுகளாக பாம்பு கடிக்கு மருத்துவம் பார்த்து, மலைவாழ் மக்களின் உயிரை காப்பாற்றி வருவதாக கூறுகிறார். இதுவரை தம்மிடம் மருத்துவம் பார்த்தும், இரண்டு உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்கிறார் இவர். பகுதி மக்களும் இவர் கூறுவதை ஏற்றுக் கொள்கின்றனர்.

நேரத்தை வீணடிக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனை உதவியை நாடினால் Anti Venom உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவம் வழங்கப்படும்.

நமது கேள்வி... மாதப்பன் மேற்கொள்ளும் மருத்துவத்தை முழுமையான அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தி ஆராய்ந்தால், பாம்பு கடிக்கு மற்றும் ஒரு சிறந்த மருந்து கிடைத்தாலும் கிடைக்கலாமே?

3500 ஆண்டுகளுக்கு முன், வில்லோ மர பட்டைகளை மருத்துவத்திற்கு எகிப்தியர்கள் பயன்படுத்திய நிலையில், அதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதால் கிடைத்தது ஆஸ்பிரின் மருந்து. "வஞ்சி மரம்" என தமிழ் சங்க இலக்கியங்களில் இந்த மரத்தின் மருத்துவ பயன்பாட்டை குறிப்பிட்டு இருந்தாலும், நாம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாததால், நாம் ஆஸ்பிரின் கண்டுபிடிக்கவில்லை.

மாதப்பன் போன்றோரின் பாரம்பரிய மருத்துவ அறிவை முறையாக ஆராய்ச்சி செய்யும் முயற்சி நம்மிடம் எப்போது தோன்றும்?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads