Nanjapuram Railway Bridge Bottleneck: Is South Western Railway Delaying Hosur Road Expansion? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Nanjapuram Railway Bridge Bottleneck: Is South Western Railway Delaying Hosur Road Expansion?

📅 வெளியீடு நாள்: 25-08-2026

📄 விளக்கம்

State Highway 85 connecting Attibele and Rayakottai is an important industrial route, linking Hosur's growing industrial corridor with major establishments including TVS Motor and Tata facilities.

However, the road narrows near the railway bridge at Nanjapuram, creating a bottleneck on an otherwise four-lane highway.

The location also lacks a proper pedestrian pathway, forcing people to walk alongside trucks, buses and other vehicles.

Industrial representatives, volunteers and road users have raised concerns over the delay in expanding the road and allege that issues involving South Western Railway are contributing to the problem.

With the District Collector pursuing road-development efforts, stakeholders are urging local political representatives and the Tamil Nadu government to intervene with railway authorities.

ஓசூர் நகர வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதா தென்மேற்கு ரயில்வே?

கர்நாடக மாநிலம் ஹூப்ளியைத் தலைமையிடமாகவும், பெரும்பாலும் வட இந்தியர்களை கொண்டு இயங்கி வரும் தென்மேற்கு ரயில்வே, ஓசூர் தொடர்பான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு தொடர்ந்து தடையாக இருப்பதாக தொழிற்சாலைகள் மற்றும் தன்னார்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே, தளி சாலை மற்றும் உள் வட்டச்சாலை சந்திப்பில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்மேற்கு ரயில்வேயின் முட்டுக்கட்டையால் நிறைவேறாமல் உள்ளது.

இந்நிலையில், அத்திப்பள்ளி முதல் ராயக்கோட்டை வரை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலை 85, நஞ்சாபுரம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தினால் அப்பகுதி குறுகிய சாலையாக உள்ளது.

டிவிஎஸ் மோட்டார்ஸ், டாடா உள்ளிட்ட பெரு நிறுவனங்களை இணைக்கும் இந்தச் சாலையில், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடைபாதையும் இல்லாததால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலான முறையில் சாலையிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மாவட்ட ஆட்சியர் சாலை விரிவாக்கத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் சாலை விரிவாக்கம் மேலும் பல ஆண்டுகளுக்கு தாமதமாகும் நிலை ஏற்படக்கூடும் என தன்னார்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஓசூர் அரசியல் தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சரின் உதவியுடன் ரயில்வே நிர்வாகத்துடன் பேசி, நஞ்சாபுரம் பகுதி சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads