Farmers Seek Detailed Probe After Transformer Theft Near Manjalagiri | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Farmers Seek Detailed Probe After Transformer Theft Near Manjalagiri

📅 வெளியீடு நாள்: 19-06-2026

📄 விளக்கம்

A transformer near Manjalagiri was reportedly damaged and stripped of copper components and oil. Local farmers have called for a detailed investigation into the incident.

ஓசூர் டிரான்ஸ்பார்மர் திருட்டு... பின்னணியில் யார்? உழவர்கள் சந்தேகம்!.

ஓசூர் - கெலமங்கலம் சாலையில் அமைந்துள்ள மஞ்சளகிரி அருகே, சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மின்வாரியத்திற்கு செலவு செய்து, 13 மின் கம்பங்கள் நட்டு, கடந்த ஆண்டு மின்மாற்றி பொருத்தப்பட்டதாம்.

இந்நிலையில், கடந்த நாள் மின்மாற்றியை உடைத்து, செம்பு கம்பிகளும், எண்ணையும் திருடப்பட்டுள்ளது. இது குறித்து ஓசூர் ஆன்லைனிடம் அப்பகுதி உழவர்கள், "மின்வாரிய பணியாளர்கள் யார் யாருக்கெல்லாம் தொலைபேசி மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார்கள் என்கிற தரவை வைத்து, காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டால், குற்றவாளிகள் பிடிபடுவதற்கு வாய்ப்பு உள்ளது" என தெரிவித்தனர்.

மேலும், "தமிழ்நாடு முதலமைச்சர், மின்மாற்றி திருடு குறித்து கண்டறிய காவல்துறையில் தனிப்படை அமைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads