Farmer Near Bagalur Alleges Loss of ₹93,000 After Stopping for ₹200 Note | Hosur News Update - Video
Farmer Near Bagalur Alleges Loss of ₹93,000 After Stopping for ₹200 Note
📅 வெளியீடு நாள்: 19-06-2026
📄 விளக்கம்
A 62-year-old farmer from Muthuganapalli near Bagalur has filed a complaint alleging that ₹93,000 was stolen after he stopped to pick up a ₹200 note found on the roadside.
பாதையில் கிடந்த 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 93 ஆயிரம் ரூபாயை இழந்த உழவர்!
ஓசூரை அடுத்த பாகலூர் அருகே முதுகானபள்ளியைச் சேர்ந்த 62 வயதான பத்தியப்பா, இந்தியன் வங்கியில், நகையை அடமானம் வைத்து, 80 ஆயிரம் ரூபாய் பெற்றாராம்.
தன்னிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து, மொத்தம் 93 ஆயிரம் ரூபாயை மொப்பட் டேங்க் கவரில் வைத்து குறுக்கு வழியாக வீட்டுக்கு சென்றுள்ளார்.
பாதையில் 200 ரூபாய் கிடந்துள்ளது. அதை எடுக்க முயன்றபோது, 93 ஆயிரம் ரூபாயை இருவர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.








