Giant Hanuman Rock Carving Found Deep Inside Ayyur Forest Near Hosur | Hosur News Update - Video
Giant Hanuman Rock Carving Found Deep Inside Ayyur Forest Near Hosur
📅 வெளியீடு நாள்: 15-06-2026
📄 விளக்கம்
Located near Kullatti village in the Ayyur forest, this impressive Hanuman rock carving is engraved on a massive natural boulder and attracts devotees seeking a peaceful spiritual experience.
ஓசூர் அடுத்த அய்யூர் காடுகளுக்கு நடுவே ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய "ஆசீர்வாதம் ஆஞ்சநேயர்" கல்வெட்டு!.
வனத்துறையினரின் முறையான அனுமதியை பெற்று, அப்பகுதி சட்ட திட்டங்களை முழுமையாக கடைபிடித்து, சுமார் 8 கிலோமீட்டர் கரடு முரடான காட்டு வழிப் பாதையில் பயணித்தால் குல்லட்டி ஊரை அடையலாம்.
குல்லட்டி ஊரிலிருந்து சுமார் முக்கால் கிலோ மீட்டர் ஒற்றையடி பாதையில் நடந்து சென்றால், மிகப்பெரிய பாறையில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் கல்வெட்டு, அமைதி நிலவும் இயற்கை சூழலில், பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
அருகே பெருமாள் மற்றும் அம்பாள் சிலைகளும் உள்ளன. எவ்வித ஆடம்பரமும், பகட்டும் இன்றி, மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு ஏற்ற சூழலில், ஆசீர்வாதம் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.








