Hosur Constable Injured After Dramatic Attempt to Stop Smuggling Car | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Constable Injured After Dramatic Attempt to Stop Smuggling Car

📅 வெளியீடு நாள்: 16-03-2026

📄 விளக்கம்

A police constable in Hosur has been injured after attempting to stop a suspected smuggling vehicle during routine vehicle checks near Jujuvadi.

According to police sources, the vehicle with a Gujarat registration number allegedly failed to stop and hit the constable while trying to escape. The officer reportedly jumped onto the bonnet of the car and held on as it traveled several kilometers along the national highway.

With the help of SIPCOT police and local residents, the vehicle was eventually stopped near the Mariamman Temple area.

The injured constable has been admitted to hospital with a leg fracture. Police have arrested the driver and seized the vehicle. Investigation is ongoing.

உயிரை பணயம் வைத்த ஓசூர் காவல்துறை ஏட்டு! கடத்தல் காரை தடுத்து நிறுத்தி அதிரடி சாகசம். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதி.

ஜூஜூவாடியில், காவல்துறையினர், கர்நாடகா பகுதியில் இருந்து வரும் வண்டிகளை, வழக்கம்போல கடந்த நாள் பிற்பகலில் தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற்பகல் சுமார் மூன்றரை மணி அளவில், அப்பகுதியில் விரைவாக வந்த குஜராத் பதிவு எண் கொண்ட ஒரு கார், நிற்காமல் செல்ல முயற்சிக்கையில், பணியில் இருந்த ஏட்டு ராஜீவ்காந்தி, காரை வழிமறித்துள்ளார்.

கார் ஓட்டுநர், ஏட்டு ராஜீவ்காந்தி மீது மோதி, நிற்காமல் தப்பிச்செல்ல முயன்றுள்ளார். ராஜீவ்காந்தி காரின் பேனட் மீது பாய்ந்து தாவி, சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு, தேசிய நெடுஞ்சாலையில் காரின் முன் பகுதியில் தொங்கியவாரே பயணித்துள்ளார்.

சிப்காட் காவல்துறையினர், திரைப்பட காட்சிகளில் வருவது போன்று, காரை விரட்டி சென்ற நிலையில், சிப்காட் மாரியம்மன் கோவில் அருகே, பொதுமக்களின் உதவியுடன் காரை மடக்கி பிடித்துள்ளனர்.

அப்போதும் ஓட்டுநர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது காரை மோதி தப்பிச்செல்ல முயன்றாராம். ஏட்டு ராஜீவ் காந்தியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிடிபட்ட ஓட்டுனர், ஓசூர் அடுத்த காளேகுண்டாவைச் சேர்ந்த யாசர் பாஷா என்பதும், கர்நாடகாவில் இருந்து, சுமார் இரண்டே கால் லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களையும், மேலும், மது உரைகளையும் கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டது.

கார் மற்றும் ஓட்டுநரை பிடித்து, சிப்காட் காவல் துறையினர் தொடர்ந்து வினவி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads