Hosur Police Rescue Allegedly Abducted Man Within Three Hours, Three Arrested | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Police Rescue Allegedly Abducted Man Within Three Hours, Three Arrested

📅 வெளியீடு நாள்: 20-06-2026

📄 விளக்கம்

A man from Pappireddipatti was allegedly abducted after arriving in Hosur and was rescued by police within three hours. Three individuals have been arrested and further investigation is continuing.

ஓசூர் பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி ரவி... 3 மணி நேரத்தில் மீட்ட ஓசூர் காவல்துறை!.

ரவி மற்றும் ஓசூரைச் சேர்ந்த மோகனுக்கு, அத்திப்பள்ளி பார் ஒன்றில் பழக்கமாம்.

தன்னிடம் பணம் கொடுத்தால், குறுகிய காலத்தில் நான்கு மடங்காக திருப்பித் தருவதாக கூறி, ரவி சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை மோகனிடமிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றதாக கூறப்படுகிறது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட ரவி, தனது தொலைபேசியை அணைத்து தலைமறைவாகி விட்டாராம்.

பின்னர் மற்றொருவர் மூலமாக, ஓசூருக்கு வரவழைக்கப்பட்ட ரவி, மோகன் குழுவினரால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ரவியின் மனைவி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, கைபேசி இருப்பிடத்தை வைத்து கண்காணித்த ஓசூர் காவல்துறையினர், மூன்று மணி நேரத்தில் அவரை மீட்டனர்.

இந்த வழக்கில் மோகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads