Reduced Foam Observed at Kelavarapalli Dam Near Hosur | Hosur News Update - Video
Reduced Foam Observed at Kelavarapalli Dam Near Hosur
📅 வெளியீடு நாள்: 02-05-2026
📄 விளக்கம்
Water release from the Kelavarapalli Dam near Hosur has shown reduced foam levels compared to previous instances.
The inflow has increased significantly following rainfall in Bengaluru, and water is being discharged into the Thenpennai river.
Farmers and fish pond leaseholders have expressed relief, as the reduced foam levels indicate an improved situation.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் குறைவான நுரையுடன் ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர். குறைவான நுரை வருவதால், பகுதி உழவர்கள் மற்றும் மீன் வளர்க்கும் குட்டை குத்தகைதாரர்கள் மகிழ்ச்சி.
கடந்த சில நாட்களாக 472 கன அடி என்ற அளவில் இருந்த நீர் வரத்து, கடந்த நாள் பெங்களூரு பகுதியில் பெய்த கனமழையால் 1103 கன அடியாக உயர்ந்தது. அணையின் உயரம், 44.28 அடியில், 41.98 அடிக்கு நீர் இருப்பதால்,
அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 993 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
இது போன்ற சூழலில், அணையின் அருகே அமைந்துள்ள பாலத்தின் மேற்புறம் வரை நுரை பொங்கி நிற்கும். ஆனால் இம்முறை அத்தகைய மோசமான நிலை இல்லாதது பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.








