Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Weather - Gold Price - Hosur Panchangam Calendar Dated 01 June 2025

தேன்கனிக்கோட்டை வட்டம் குந்துமாரனபள்ளி ஊரில், கோதண்ட ராமசாமி கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 

தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பைரமங்கலம் மற்றும் குந்துமாறனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, எழுபத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வளர்ச்சி பணிகளை, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் T இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். 

ஓசூர் கார்பராண்டம் தொழிற்சாலைக்கு செல்லும் கெயில் நிறுவனத்தின் எரிக்காற்று குழாயில் ஏற்பட்ட கசிவால், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், சுமார் இரண்டு மணி நேரம் தீ பற்றி எரிந்தது.  சுமார் ஏழு அடி ஆழத்தில் உள்ள இந்த குழாய்கள் பாதிப்படைந்து, தீ பற்றியதை தொடர்ந்து, சிப்காட் காவல் நலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வினவி வருகின்றனர். 

Thug Life படவிழாவில், நடிகர் கமலகாசன், தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பேசியதை, வன்மமாக மாற்றும் கன்னட அமைப்பினரை கண்டித்து, ஓசூரில், தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில், ராம் நகர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஓசூர் சூசூவாடி பகுதியில் உள்ள தாதாராவ் மற்றும் தாயப்பா ஏரிகள் சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. 

கிருஷ்ணகிரி அருகே, கும்மனூரில் எருது விடும் விழா சிறப்பாக நடைபெற்றது.  இதில் சுமார் முன்னூறு காளைகள் பங்கெடுத்தன. 

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பாக்கியமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு, வரும் ஜூன் இரண்டாம் நாள் முதல் ஐந்தாம் நாள் வரை நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

ஓசூர் ஓமலூர் இடையே, இரட்டை வழி இருப்பு பாதை அமைக்கும் பணி, இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என தென்மேற்கு இருப்புப் பாதை மேலாண்மை அறிவித்துள்ளது. 

தென்பெண்ணை ஆற்றில், வேதிக்கழிவுகள் கலப்பதை தடுக்க கோரி, ஓசூர் சாராட்சியர் அலுவலகம் முன்பு Marxist Communist கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: