எஸ்சி/எஸ்டி நபர்களுக்கு எதிரான ஒவ்வொரு "இழிவு படுத்துதல்" எஸ்சி/எஸ்டி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருத முடியாது: உச்ச நீதிமன்றம்

எஸ்சி/எஸ்டி நபர்களுக்கு எதிரான ஒவ்வொரு "இழிவு படுத்துதல்" எஸ்சி/எஸ்டி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருத முடியாது: உச்ச நீதிமன்றம்

ஆதிக்கம் செலுத்துபவரால் ஏற்படும் " இழிவு படுத்தும் செயல்" பாதிக்கப்பட்ட நபரின் சாதி அடையாளத்துடன் நேரடி முறையில் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே சட்டம் பொருந்தும் என்று பெஞ்ச் கூறுகிறது

உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23,2024) ஒரு தீர்ப்பில், ஒரு பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடி நபரை குறிவைத்து அனைத்து விதமான இழிவுபடுத்துதல் மற்றும் அச்சுறுத்தும் கருத்துக்கள் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 இன் கீழ் ஒரு குற்றமாக இருக்காது என்று தீர்ப்பளித்தது.

நீதியரசர்கள் அமர்வு P.B. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் 1989 ஆம் ஆண்டின் சிறப்புச் சட்டத்தை விளக்கி, யூடியூப் சேனலான "மருநாதன் மலையாளியின்" ஆசிரியரும் வெளியீட்டாளருமான ஷாஜன் ஸ்காரியாவுக்கு முன் ஜாமீன் வழங்கினர். 1989 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் கேரள சட்டமன்ற உறுப்பினர் P.V. Sreenijin க்கு எதிராக அவதூறான காணொளியை பதிவேற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். P.V. Sreenijin, ஒரு பட்டியல் சாதி சமூக உறுப்பினர்.

நீதியரசர் பர்திவாலா கூறுகையில், ஆதிக்கம் செலுத்துபவர், பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி (எஸ்சி/எஸ்டி) நபராக இல்லாத நிலையில், பாதிப்புக்கு உள்ளானவர் பட்டியல் சாதியினராய் இருந்து, இழிவுபடுத்துதல் தன்மை நேரடி ஜாதி அடிப்படையில் ஆனதாக இல்லாத நிலையில், 1989 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது. ஏனெனில் அவரது இழிவுபடுத்துதல் அல்லது அச்சுறுத்தும் செயலில் பாதிக்கப்பட்டவர் எஸ்சி/எஸ்டி நபராக இருந்தாலும், பாதிப்பு ஜாதி அடிப்படையில் ஆனதாக இல்லாத நிலையில் சட்டம் பொருந்தாது.

அதே வேளையில், பாதிக்கப்பட்டவர் எஸ்சி/எஸ்டி உறுப்பினர் என்பதால் மட்டுமே வேண்டுமென்றே இழிவுபடுத்தப்பட்டிருந்தால்  இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும். உண்மையில், வேண்டுமென்றே இழிவு படுத்துதல் அல்லது அச்சுறுத்தலுக்குப் பின்னால் உள்ள அடிப்படை, பாதிக்கப்பட்டவர் எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

"பதிவேற்றப்பட்ட காணொளியின் டிரான்ஸ்கிரிப்டில் மேல்முறையீட்டாளரால் (Skaria) அந்த குற்றச்சாட்டுகள் புகார் அளித்தவர் (Srinijin) ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையினால் மட்டுமே செய்யப்பட்டன என்பதைக் குறிக்க எதுவும் இல்லை. புகார்தாரர் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக இருந்திருக்காவிட்டால்,  மேல்முறையீட்டாளர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்க மாட்டாரா?. பதில் கேள்வியிலேயே உள்ளது" என்று நீதிபதி பர்திவாலா நியாயப்படுத்தினார்.

1989 ஆம் ஆண்டு சட்டத்தின் 3(1)(r)  மற்றும் 3 (1) (u) பிரிவுகளின் கீழ் Skaria மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதல் சட்டப்பிரிவு ஒரு எஸ்சி/எஸ்டி நபரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பொதுவில் இழிவுப்படுத்துதலை கையாண்டது.  இரண்டாவது எஸ்சி/எஸ்டி சமூகங்களுக்கு எதிராக வெறுப்பு, தீய எண்ணம் அல்லது பகைமையை ஊக்குவிக்கும் குற்றத்தை உள்ளடக்கியது.

பாதிக்கப்பட்டவர் ஒரு எஸ்சி/எஸ்டி உறுப்பினர் என்ற உண்மையை அறிவது பிரிவு 3(1)(r)- ஐ ஈர்க்க போதுமானதாக இருக்காது. இந்த சட்டப்பிரிவை திறம்பட செயல்படுத்த, ஆதிக்கம் செலுத்துபவரால் ஏற்படும் " இழிவு" பாதிக்கப்பட்டவரின் சாதி அடையாளத்துடன் நேரடியான முறையில் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பு குறிப்பிட்டது.

"எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேண்டுமென்றே இழிவுபடுத்துதல் அல்லது அச்சுறுத்துவது சாதி அடிப்படையிலான இழிவான உணர்வை ஏற்படுத்தாது. தற்போது நடைமுறையில் உள்ள தீண்டாமை நடைமுறையின் அடிப்படையிலோ அல்லது "கீழ் சாதியினர்/தீண்டத்தகாதவர்கள்" மீது "உயர் சாதியினரின்" மேன்மை, "தூய்மை" மற்றும் "மாசுபாடு" போன்ற கருத்துக்கள் போன்ற வரலாற்று ரீதியாக வேரூன்றிய கருத்துக்களை வலுப்படுத்துவதற்கோ வேண்டுமென்றே இழிவு படுத்துதல் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலைகளில் மட்டுமே, இது 1989 சட்டத்தால் கருதப்பட்ட வகையை இழிவு படுத்துதல் அல்லது அச்சுறுத்துவதாகக் கூறலாம்" என்று நீதிபதி பர்திவாலா கூறினார்.

Skaria வின் காணொளி பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியின உறுப்பினர்களுக்கு எதிராக பகை, வெறுப்பு அல்லது தவறான உணர்வுகளை ஊக்குவிப்பதைக் குறிக்க எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

"காணொளி பொதுவாக பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியின உறுப்பினர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. அவரது இலக்கு புகார்தாரர் மட்டுமே" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: