Safety Concerns Raised Over School Attended by 300 Students in Kelamangalam Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Safety Concerns Raised Over School Attended by 300 Students in Kelamangalam Near Hosur

📅 வெளியீடு நாள்: 04-06-2026

📄 விளக்கம்

Volunteers have urged authorities to take preventive action at a Kelamangalam school where a damaged wall and large trees near the building have raised safety concerns.

300 பள்ளி குழந்தைகளின் உயிரின் மதிப்பு 12 ஆயிரம் ரூபாயை விட மலிவானதா?

ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில், ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் செயல்படும் துவக்கப்பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்று வருகின்றனர்.

பள்ளியின் முன்பக்க மதில் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது.

மேலும், பள்ளி கட்டிடத்தை ஒட்டி வானுயர்ந்து வளர்ந்துள்ள மரங்கள், பலத்த காற்றடித்தால் கட்டிடத்தையே இழுத்து சரிக்கும் நிலையில் உள்ளது.

பள்ளி நேரத்தில் விபத்து ஏற்பட்டால், மாணவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.

இதுகுறித்து தன்னார்வலர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், வட்டார வளர்ச்சி அலுவலகமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் பொறுப்பை ஒருவர் மீது ஒருவர் தள்ளி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பே மரங்களை அகற்ற அனுமதி கிடைத்த நிலையில், அதற்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என்பதால், மரங்களை அகற்ற இயலாது என, வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பாக பார்வையிட்டவர்கள் தெரிவித்ததாக பள்ளி ஆசிரியர்கள் வேதனை.

விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads