மின்விசிறி பொருத்திய முக கவசம்!

மின்விசிறி பொருத்திய முக கவசம்!

கொரோனா அச்சுறுத்தல் வந்ததும் வந்தது, முக கவசம் அணிவது என்பது வாழ்க்கையின் ஒரு கட்டாய பகுதியாகி விட்டது.  சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் முகக் கவசம் அணிவது என்பது ஒரு குற்றச் செயலாக பார்க்கப்பட்டு, அப்படி அணிந்து செல்பவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தனர்.  ஆனால் இன்று, முக கவசம் அணியாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றம்!

கொரோனா தீநுண்மி (Virus) தொற்று பரவத் துவங்கிய நாட்களில், N95, மருத்துவ தேவைக்கான முக கவசம், மாசுகட்டுப்பாடு முக கவசம் என முகக் கவசங்கள் வேறு பல தேவைக்கு என்று வடிவமைக்கப்பட்டு இருந்ததே ஒழிய, நாளது பயன்பாட்டிற்கு, பொதுமக்கள் அணிவதற்கு ஏதுவானதாக இல்லை. 

இந்தியாவைப் பொருத்தவரை, முகக் கவசம் தேவை சந்தைகளில் ஏற்பட்டவுடன், உள்ளாடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உள்ளாடைக்கு பயன்படுத்தும் துணிகளை கொண்டு முகக் கவசங்களை வடிவமைத்து, சந்தைப் படுத்தினர்.

2019ஆம் ஆண்டு துவங்கி, இப்பொழுது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், முகக்கவசம் அணிய, மக்களின் தேவைக்கு ஏற்ப, புத்தம் புதிய தொழில் நுட்பங்கள், அவற்றில் புகுத்தப்பட்டு வருகின்றன.

மின்விசிறி பொருத்திய முக கவசம்.


முக கவசம் அணிவது அடிப்படை இடர்பாடு, நாம் வெளியிடும் மூச்சுக்காற்று, அணிந்திருக்கும் முகத்திற்கு உள்ளேயே மீண்டும் மீண்டும் சுழற்சி செய்து, மூச்சுத்திணறலை ஏற்படுத்துவதாகும்.  பல நேரங்களில், நம் கண்கள் பொங்கி போகும் அளவிற்கு, நமது மூச்சுக் காற்றின் வெப்பம் நம் கண்களை பாதித்துவிடும்.  

வெப்பமான நாட்களில், பத்து நிமிடம் தொடர்ந்து முக கவசம் அணிவது என்பது, கொடுமையிலும் கொடுமையான நிலையாக இருந்து வந்தது.  பெரும்பாலான மக்கள், முகக் கவசம் அணிவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, பாதிக்கப்படுவதை காட்டிலும், தீநுண்மி தொற்று ஏற்பட்டால் ஏற்படும் பாதிப்பின் அளவு குறைவே எனக்கருதி முகக் கவசம் அணிவதை தவிர்த்து வந்தனர்.

இந்த நிலையில்தான், பல நிறுவனங்கள், வெளியீடு மூச்சுக்காற்றை உடனடியாக அப்புறப்படுத்த, பல தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இப்பொழுது சந்தையில், சிறிய மின் விசிறி பொருத்தப்பட்ட, முகக் கவசங்கள் வந்துவிட்டன.  இந்த முகக் கவசங்கள், வெளியீடு மூச்சுக்காற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு எதுவாகவும், புதிய காற்றை உள்ளிழுத்து செலுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை வழக்கமான முகக் கவசங்கள் போலல்லாமல், மூச்சு விடும் காற்றை மறுசுழற்சி செய்ய அறிவார்ந்த மற்றும் அடக்கமான மோட்டார் பொருத்தப்பட்ட விசிறி மூலம் காற்றின் சுழற்சி இயக்கப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலைக் குறைக்கிறது.

இத்தகைய முகக் கவசங்கள், HEPA காற்று வடிகட்டியுடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் கழுவக்கூடிய வகையில் கிடைக்கிறது.

பொருத்தப்பட்ட விசிறிக்கு, மின்கல மின்னூட்டி (பேட்டரி சார்ஜர்) பொருத்தப்பட்டு, 4 மணி நேரம் வரை விசிறி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் முகக் கவசம் அணிவது பாதுகாப்பாக மற்றும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

HEPA வடிகட்டியின் தொழில்நுட்பம் தொடர்ந்து பாதுகாப்பை வழங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாசு, தூசி, மூடுபனி, வாகன புகை மற்றும் பலவற்றுக்கு எதிராக 6x பாதுகாப்பைப் பெறுகிறீர்கள். முகத்திற்கு என்றே வடிவமைக்கப்பட்ட துணி, உடல் வெப்பநிலையை குளிரூட்டுவதோடு முகம் மற்றும் தோலுக்கு ஒரு பகட்டான உணர்வைத் தருகிறது. கோடை மற்றும் குளிர்காலத்திற்கான சிறந்த காற்றோட்டமான கவசம்.

இவை எடை குறைவாக இருப்பதால் அறிந்துகொள்வதற்கு நல்ல உணர்வை தருகிறது.

இத்தகைய முகக் கவசங்கள், பிலிப்ஸ் (Philips), கென்னத் கோல் (Kenneth Cole), அவுரா ஏர் (Aura Air) என பல நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.

இவை அமேசான், பிலிப்கார்ட் போன்ற நிகழ்நிலை விற்பனை தளங்கள் மூலம், ரூபாய் 3000 முதல் கிடைக்கிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: